சிதம்பரம்:
சிதம்பரம் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் முயற்சியால் தனியார் நிலத்தை கிரயம் பெற்று புதிய மயானம் மற்றும் மயான பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்தை அடுத்த கண்ணங்குடி ஊராட்சிக்குள்பட்ட பெரிய தெரு ஆதிதிராவிடர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தலித் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு 50 ஆண்டு காலமாக மயான வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் சடலங்களை பாசிமுத்தான் ஓடைக்கரை பகுதியில் அடக்கம் செய்து வந்தனர்.
இதையடுத்து ஊராட்சித் தலைவர் கே. ராஜசேகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் உத்திரவின் பேரில் தனியாருக்கு சொந்தமான இடத்தை ஆதிதிராவிட நலத்துறை சார்பில் கிரயம் பெற்று புதிய மயானப் பாதையும், புதிய மயானக் கொட்டகையும் அமைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக