உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 29, 2010

காட்டுமன்னார்கோவில் பகுதியில் இலங்கை அகதிகளுக்கு ரூ. 55 கோடியில் வீடுகள்

சிதம்பரம்:

                  காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமை தமிழக அரசு மறுவாழ்வுத்துறை இணை ஆணையர் ஜெயக்குமார் புதன்கிழமை ஆய்வு செய்தார். அப்போது முகாமில் வசிப்பவர்களிடம் அரசின் நலத்திட்ட உதவிகள் சரியாக வழங்கப்படுகிறதா என அவர் கேட்டறிந்தார். அவரிடம், தங்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என பெரும்பாலான மக்கள் கோரினர். விரைவில் வீடுகள் கட்டித்தரப்படும் என ஜெயக்குமார் உறுதியளித்தார். ஆணையருடன் தனிவட்டாட்சியர் ராஜகோபால், காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் விஜயலட்சுமி ஆகியோர் உடன் வந்தனர். 

பின்னர்  தமிழக அரசு மறுவாழ்வுத்துறை இணை ஆணையர் ஜெயக்குமார் தெரிவித்தது: 

                   தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்காக ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அகதிகள் முகாம்களில் 37.3 செலவில் 14 வகையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் முகாமில் ரூ. 7 லட்சம் செலவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. ரூ. 1.25 லட்சம் செலவில் மின்ஒயர்கள் மாற்றப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு ரூ. 55 கோடி செலவில் வீடுகள் கட்டித்தரப்படும். காட்டுமன்னார்கோவில் முகாமில் உள்ள 75 குடும்பங்களுக்கு வீடு கட்டித்தரப்படும். 

                        இப்போது அகதிகள் முகாம் அமைந்துள்ள வேளாண்மை மார்க்கெட்டிங் கமிட்டி சொந்தமான இடத்தில் வீடுகள் கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் வீடுகள் கட்டப்படும் என அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior