கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் மன வளர்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகள் பயிலும் 6 சிறப்புப் பள்ளிகளுக்கு, ரூ. 6.1 லட்சம் நிதி உதவியை, மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் புதன்கிழமை வழங்கினார். மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லமான கடலூர் ஒயஸிஸ் தொண்டு நிறுவனம், கருணா மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதை, மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் புதன்கிழமை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டத்தில் அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் மன வளர்ச்சி குன்றியோருக்கான 6 சிறப்புப் பள்ளிகளுக்கு, ரூ. 6.1 லட்சத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் அந்த நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் வழங்கினார். மேட்டுப்பாளையத்தில் லைஃப் ஹெல்ப் சென்டர் என்ற மன வளர்ச்சி குன்றியோருக்கான பள்ளிக்கு முதல் முறை மானியமாக ரூ. 1,69,832 வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் 4,794 பேருக்கும், மனநலம் பாதிக்கப்பட்ட 74 பேருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
மனவளர்ச்சி குன்றியோருக்கான 6 பள்ளிகளில் 356 மாணவர்கள் படிக்கிறார்கள். 2010- 11 ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்களுக்கு பரமரிப்பு உதவித் தொகை ரூ. 31.95 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.
கடலூர் புதுப்பாளையம் ராமதாஸ் தெரு, கருணா மன நலம் பாதிக்கப் பட்டோருக்கான இல்லத்தில், மனலம் பாதிக்கப்பட்டவர்களைச் சேர்ப்பதற்கு தொலைபேசி 04142-295953, செல் 9443129464 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக