உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 18, 2010

காட்டுமன்னார்கோவிலில் சி.பி.ஐ., அதிகாரி எனக் கூறி வீட்டிற்குள் புகுந்தவர் கைது



காட்டுமன்னார் கோவில் : 

               காட்டுமன்னார்கோவிலில் சி.பி.ஐ., அதிகாரி எனக் கூறி வீட்டிற்குள் புகுந்த போதை ஆசாமியை, போலீசார் கைது செய்தனர்.

               கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ரெட்டியார் ரோட்டைச் சேர்ந்தவர் சலீம் பாஷா. இவரது மனைவி சம்ஷத் பேகம். அவர் வீட்டில் இருந்த போது சபாரி சூட் அணிந்த, "டிப் டாப்' ஆசாமி ஒருவர், வீட்டிற்குள் புகுந்தார். யார் என கேட்ட போது, தான் ஒரு சி.பி.ஐ., அதிகாரி என்றும், வீட்டை சோதனையிட வேண்டும் என்றும் கூறினார். பதறிப்போன சம்ஷத் பேகம், அருகில் உள்ளவர்களை அழைக்க, கூட்டம் கூடியது. போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சக்தி அங்கு வந்து, "டிப் டாப்' ஆசாமியை விசாரித்தார். 

                        போதையில் இருந்த அவர் முரணாக பதில் கூறியதால், போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தார். தான் சி.பி.ஐ., அதிகாரி இல்லை என்றும், மக்கள் துரத்தியதால் வீட்டிற்குள் புகுந்து விட்டதாகவும் கூறினார். அவரது சட்டை பையில் மு.க.இளந்தமிழன், மாநிலத் தலைவர், மாநில தமிழ் பண்பாட்டு மன்றம், தஞ்சாவூர் என்ற விசிட்டிங் கார்டு இருந்தது. காட்டுமன்னார் கோவில் போலீசார், போதை ஆசாமி மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior