உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 18, 2010

பண்ருட்டியில் நகைகளுடன் தலைமறைவான அடகு கடை உரிமையாளர் கைது



கடலூர் :

              பண்ருட்டியில் 470 சவரன் நகைகளுடன் தலைமறைவான நகைக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
 
               கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த ரெட்டிப்பாளையம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், பண்ருட்டியில் ஸ்ரீவீரப்பா ஜுவல்லரி நகை அடகு கடையில், உரிமையாளர் சிவக்குமாரிடம் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மோதிரம், காசு உள்ளிட்ட தங்க நகைகளை அடகு வைத்தார். நகைகளை மீட்கச் சென்ற போது கடை பூட்டிக்கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து சிவக்குமாரை தேடினர்.
 
              இந்நிலையில் சிவக்குமாரிடம் நகை அடகு வைத்து ஏமாந்த 70 பேர் புகார் செய்தனர். எஸ்.பி., உத்தரவின் பேரில் இவ்வழக்கு மாவட்ட குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டது. மேலும் தனிப்படை போலீசார், சிவக்குமாரை தேடி வந்தனர். போலீசார் தன்னை தேடுவதாக அறிந்த சிவக்குமார் கடையில் இருக்கும் நகை சீட்டுகளை எடுப்பதற்காக நேற்று பண்ருட்டி நகராட்சி அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது சிறப்பு படை போலீசார் அவரை கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின், சிவக்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 
இச்சம்பவம் குறித்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஷ் நேற்று கூறியது: 
 
                  பண்ருட்டி கடைக்கடை உரிமையாளரை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னிடம் வாடிக்கையாளர்கள் வைத்த நகைகளை பண்ருட்டி முத்தூட் பின்கார்ப், பன்னாலால் ஜெயின் அடகு கடை, புதுச்சேரி மற்றும் பண்ருட்டியில் உள்ள முத்தூட் பைனான்ஸ் உள்ளிட்ட நான்கு நிறுவனங்களில், 470 சவரன் நகைகளை சிவக்குமார் அடகு வைத்துள்ளது தெரியவந்தது. 
 
                     அடகு வைத்துள்ள ரசீதுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கோர்ட் நடவடிக்கை மூலம் விரைவில் நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார். முன்னதாக நேற்று காலை சிவக்குமாரின் நகை அடகு கடையில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜிகுமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் பூபாலசந்திரன், வி.ஏ.ஓ., லூர்துசாமி மற்றும் போலீசார் அடகு சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior