உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 22, 2010

கலைஞர் வீட்டுவசதி திட்டம்: கடலூர் மாவட்டத்தில் 26 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன

சிதம்பரம்:
 
           டலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.195.89 கோடி செலவில் 26,119 வீடுகள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
 
              காட்டுமன்னார்கோவிலில் முட்டம் உள்ளிட்ட 36 கிராமங்களில் உள்ள 5358 பயனாளிகளுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி அட்டை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. திட்ட இயக்குநர் (பொது) ரா.வெங்கடாசலம் தலைமை வகித்தார். இந் நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலைஞர் வீடுகட்டும் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 5358 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும், 539 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பினையும் வழங்கிப் பேசினார்.  
 
அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது: 
 
            காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 11,815 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 8382 பேர் தகுதியுடையவர்கள், நிபந்தனையுடன் தகுதியுடையவர்கள் 3433 பேர் தேர்ந்தெடுகப்பட்டுள்ளனர். காட்டுமன்னார்கோவில் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.12.95 கோடி செலவில் 1726 வீடுகள் இந்த ஆண்டு கட்டப்படுகின்றன என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
 
                 ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் சரவணக்குமார் வரவேற்றார். காட்டுமன்னார்கோவில் சட்டப் பேரவை உறுப்பினர் துரை.ரவிக்குமார், ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.ஜெயச்சந்திரன், பேரூராட்சி மன்றத் தலைவர் கணேசமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.ரேவதி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior