உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 22, 2010

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான "ஸ்டாட்" விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

கடலூர்:

          சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான "ஸ்டாட்' விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

            தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சர்வதேச, தேசிய, மாநில அளவில் பதக்கம் பெற்ற தலா மூன்று ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஆறு வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு "ஸ்டாட்' விருது மற்றும் 3,000 ரூபாய் ரொக்க பரிசும் வழங்குகிறது. இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரைக்கான "ஸ்டாட்' விருது வரும் ஜனவரி 26ம் தேதி நடக்கும் குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது.

               இதில் தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, டென்னிஸ், மேஜை பந்து, ரோயிங், துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், நீச்சல், டிரைலத்தான், பளு தூக்குதல், வாலிபால், இறகு பந்து, ஜிம்னாஸ்டிக், கபடி, வாள் சண்டை, டேக்வண்டா, செபக் டக்ரா, ஸ்கேட்டிங், பீச் வாலிபால், கிரிக்கெட், சைக்கிள் ஓட்டுதல், படகு சவாரி, ஜூடோ, சதுரங்கம், கேரம், வளை பந்து, கோ கோ, வலு தூக்குதல், சிலம்பம், எறிபந்து ஆகிய போட்டிகள் விருதிற்கு பரிசீலிக்கப்படும்.

               கடலூர் மாவட்டத்தில் படிக்கும், மாவட்டத்திற்காக விளையாடிய வேலை இல்லாத வீரர்கள் மற்றும் படிக்காத வீரர்கள், வீராங்கனைகள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஒருவர் ஒரு ஆண்டிற்கு ஒரு மாவட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒருமுறை விருது பெற்றவர்கள் மூன்று ஆண்டிற்கு பின்னர் தான் விண்ணப்பிக்க வேண்டும்.பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் வரிசைபடுத்தி அதிக மதிப்பெண்கள் பெற்றவருக்கு "ஸ்டாட்' விருது வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவரிடம் பெற்று, வரும் 31ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior