கடலூர்:
சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்றுசெல்வது, மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை-விழுப்புரம் அகலப்பாதை மார்க்கத்தில் ரயில்கள் இயக்கம் தொடங்கியபோது, பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடலூர் நகரப் பகுதியான திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றன. பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டம் காரணமாக, சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் 6 மாத காலத்துக்கு மட்டும், பரிட்சார்த்தமாக திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்றுபோக தென் ரயில்வே உத்தரவிட்டது. இந்த உத்தரவு ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிகிறது.
இந்த நிலையில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பாப்புலியூரில் நிரந்தரமாக நின்றுபோக வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ். அழகிரி, ரயில்வே அதிகாரிகளை சந்தித்து, மக்களின் கோரிக்கையை எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து மேலும் 6 மாதத்துக்கு, சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்றுபோக தென் ரயில்வே நிர்வாகம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இத் தகவலை கடலூர் மக்களவை உறுப்பினரின் செய்தித் தொடர்பாளர் என்.குமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக