உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 07, 2011

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு

        2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத தொகுதியாகவும், விஐபி அந்தஸ்தை பெற்ற தொகுதியாகவும் பேசப்பட்டு வந்தது. 

               முதல்முறையாக அரசியல் களம் கண்ட தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. அதேபோல் விருத்தாசலம் பாமகவின் கோட்டை என அக்கட்சியினரால் வர்ணிக்கப்படும். இத்தகைய நிலையில் 2006-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமகவுக்கு விருத்தாசலம் தொகுதி ஒதுக்கப்பட்டு, பாமக மாநில சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் டாக்டர் கோவிந்தசாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் தொகுதியில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது. தேமுதிக மற்றும் பாமகவினர் தங்கள் பிரசாரங்களை முழுவேகத்தில் செய்துவந்தனர். 

              இதனால் நாள்தோறும் தொகுதியில் உச்சகட்ட பரபரப்புகள் நிலவியது. பாமக விருத்தாசலத்தைக் கைப்பற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால், 13,777 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிகவின் ஒரே சட்டமன்ற உறுப்பினராக விஜயகாந்த் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு சென்றார்.கடந்த தேர்தலில் பரபரப்புடன் பேசப்பட்டு வந்த விருத்தாசலம் தொகுதியில் தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் நீதிராஜனும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் முத்துகுமாரும் போட்டியிடுகின்றனர். 

             இரண்டு வேட்பாளர்களும் உள்ளூரைச் சேர்ந்த, புதுமுகங்கள் என்பதால் தொகுதியில் கூடுதல் பரபரப்பு இல்லாமல் பிரசாரம் நடந்து வருகிறது. இந்த முறை தேமுதிகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று திமுக "இலக்கு' நிச்சயித்துள்ளதால் நீதிராஜனின் பிரசாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. முத்துக்குமார் சற்று பின்தங்கியே உள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior