உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 07, 2011

புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு

               கடலூர் மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட புவனகிரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் மாநில இளைஞரணி செயலாளர் த.அறிவுச்செல்வனுக்கும், அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ.வும், மாவட்ட மகளிரணி தலைவியுமான செல்வி ராமஜெயத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் செல்வி ராமஜெயம் மிகப்பெரிய நல திட்டப் பணிகலை மேற்கொள்ளாவிடிலும் தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டுள்ளார். 

             ஆனால் தொகுதியில் இவர் மீது கெட்ட பெயர் இல்லாதது அவருக்கு பலமாக திகழ்கிறது. அதிமுக தலைமையின் உத்தரவால் இவரது வெற்றிக்காக அதிமுக மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறார். மிகவும் அன்பாகவும், அனைவருடனும் எளிமையாக பழகக்கூடிய, சிறந்த பேச்சாற்றல் உடைய, கூட்டணி பலம் வாய்ந்த பாமக வேட்பாளர் த.அறிவுச்செல்வன் உள்ளூர் வேட்பாளர் அல்ல. 

              அரியலூர் மாவட்டம் தத்தனூரைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுவது அவருக்கு இது பலவீனமாக திகழ்கிறது.  இருப்பினும் அவர் சேத்தியாதோப்பில் வாடகை வீட்டில் குடியேறி, அனைவரையும் அரவணைத்து தேர்தல் பணியாற்றி வருவது அவரது பலமாக உள்ளது.தற்போது சீரமைக்கப்பட்ட இத்தொகுதியில் பரங்கிப்பேட்டை ஒன்றியம் சிதம்பரம் தொகுதியில் சேர்க்கப்பட்டு கம்மாபுரம் ஒன்றியம் சேர்ந்துள்ளதால் அந்த ஒன்றியத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான வாக்குகள் எந்த வேட்பாளருக்கு அதிகம் கிடைக்கும் என்பதை பொறுத்துதான் யாருக்கு? வெற்றி வாய்ப்பு என்பதை நிர்ணயம் செய்ய முடியும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior