உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 07, 2011

நெய்வேலியில் பா.ஜ.க.தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பிரச்சாரம்

நெய்வேலி : 

           "குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஆட்சி போன்று, தமிழகத்தில் மாற்றம் தேவை'' என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பேசினார். 

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் பா.ஜ., வேட்பாளர் கற்பகம் மற்றும் கடலூர் வேட்பாளர் குணசேகரன் ஆகியோரை ஆதரித்து அவர் பேசியது: 

                 ஜம்மு காஷ்மீரில் கூட அமைதியாக தேர்தலை நடத்தி காட்டிய தேர்தல் கமிஷன், தமிழகத்தில் அமைதியாக தேர்தலை நடத்த மிகவும் சிரமப்படுகிறது. இருப்பினும், தி.மு.க., கூட்டணிக்கு எதிராக அமைதியான, நியாயமான, தேர்தலை நடத்தி தேர்தல் கமிஷன் ஜெயித்து வருகிறது.

          மே மாதம் 13ம் தேதிக்கு பிறகு தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., நீடிக்கும் என, இரு கட்சிகளாலும் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? மாறுவது மட்டுமே மாறாத கொள்கை என்பதை பெருமையாக கூறிக் கொள்ளும் பா.ம.க.,வை வெற்றி பெற வைத்தால், நெய்வேலியில் தி.மு.க.,வும் அமைதியும் காணாமல் போய்விடும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பின்னணி உள்ளது. தி.க.,விலிருந்து தி.மு.க., அதிலிருந்து அ.தி.மு.க., தோன்றியதற்கு தனிமனித பிரச்னை காரணமாக இருந்தது. 

           ஆனால், பா.ஜ., இந்துக்களின் உரிமையை வலியுறுத்தி கொள்கை காரணமாக உருவானது. தி.மு.க., குடும்ப அரசியல் நடத்துகின்றனர் என கூறும் அ.தி.மு.க., அவர்கள் ஆட்சியில் இருந்த போது மன்னார்குடி குடும்பத்தில் ஆட்சி அதிகாரம் கிடந்தது. இந்த விஷயத்தில், இரு கட்சிகளும் ஒரே நிலை தான். தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டும் ஒன்று தான் என, தெளிவாக குற்றம் சாட்ட முடியும். இரு கட்சிகளையும் அப்புறப்படுத்தி விட்டு, மத்தியில் வாஜ்பாய் ஆட்சி போன்றும், குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஆட்சி போன்றும் தமிழகத்தில் மாற்றம் தேவை. இவ்வாறு இல.கணேசன் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior