உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 07, 2011

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு

              நெய்வேலி தொகுதியில் பாமக-அதிமுக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. 

            பண்ருட்டி தொகுதியில் 2 முறை தொடர்ந்து பாம.க.. எம்.எல்.ஏ.வாக இருந்த தி.வேல்முருகனுக்கும், நெய்வேலி தொகுதி அதிமுக செயலர் எம்.பி.எஸ். சிவசுப்ரமணியத்துக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.கடந்த 10 ஆண்டுகளாக பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து செய்த சாதனைகளையும், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பிரச்சனைக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மிகப் பெரிய போராட்டம் நடத்தி, கோரிக்கையை நிறைவேற்றியது. 

              என்.எல்.சி. நிறுவனத்துக்காக வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோருக்காக இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து கொடுத்தது. புதிய தொகுதியாக நெய்வேலி உருவெடுத்தப் பின் தொகுதிக்குள்பட்ட எல்லையிலேயே அரசு பொறியியல் கல்லூரி கொண்டுவந்தது போன்ற சாதனைகளை தனது பிரசாரத்தின் போது வலுவாக முன்வைக்கிறார். அனைத்துத் தரப்பினரையும் பாதித்துள்ள விலைவாசி உயர்வு, திமுகவினரின் அராஜகம், ஸ்பெக்ட்ரம் ஊழல், பாமக-வின் இரட்டை வேடம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நெய்வேலி வாசிகளை புறக்கணித்தது போன்ற முக்கிய பிரச்னைகளை பிரசாரத்தின் மூலம் வலு சேர்க்கிறார் எம்.பி..எஸ்.சிவசுப்ரமணியன்.

                  தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக நெய்வேலி என்.எல்.சி. ஊழியர்கள் விளங்குவதால், அவர்களது வாக்குகளைப் பெற, தொ.மு.ச. பலத்தையும், என்.எல்.சி. பொறியாளர்களின் ஆதரவையும் வேல்முருகன் மிகவும் நம்பியிருக்கிறார். இதேபோன்று வேல்முருகனின் வரவை விரும்பாத திமுகவினரும், பொறியாளர்களும் எப்படியும் தன்னை விரும்புவார்கள் என்ற கணக்கில் அதிமுக வேட்பாளரும் மறைமுகமாக பொறியாளர்களின் வீடு வீடாக சென்று வாக்குச் சேகரிக்கத் தொடங்கியிருப்பதால், அனல் மின் நிலையம் அமைந்துள்ள நெய்வேலியில் தேர்தல் பிரசாரம் அனலாக கொதிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior