உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 07, 2011

தமிழகம் முழுவதும் தபால் அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தும் வசதி

          சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 192 தபால் நிலையங்களில், வீட்டு உபயோகத்துக்கான மின்சார கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

           தபால் நிலையங்களில் வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம் வசூல் செய்யும் சேவையை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள மாநகராட்சிப்பகுதிகளில் உள்ள நுகர்வோர் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

            சென்னை தியாகராய நகர் தலைமை தபால் நிலையம் போன்று கம்ப்யூட்டர் வசதி செய்யப்பட்டுள்ள 192 தபால் நிலையங்களில் மின்கட்டணம் செலுத்தலாம்.

இது குறித்து, மத்திய கோட்ட மூத்த கண்காணிப்பாளர் வெங்கட ராமன், மூத்த போஸ்ட் மாஸ்டர் எஸ்.சாமுவேல் ஆகியோர்,

 

                  தியாகராய நகர் தலைமை தபால் நிலையத்தில் மின்கட்டணம் வசூலிப்பதற்காக 4 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கவுண்டரில் தபால் துறை தொடர்பான ஸ்பீடு போஸ்டு உள்ளிட்ட சேவைகளையும் பெறலாம். சென்னையில் இருந்து அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா உள்பட வெளிநாடுகளுக்கு ஊறுகாய், பரிசுப்பொருட்கள், பட்டுப்புடவை உள்ளிட்ட துணிவகைகள் தபால் பார்சல் மூலம் அனுப்பப்படுகின்றன.

            ஊறுகாய் போன்ற உணவுப்பொருட்களை, வெளிநாடுகளுக்கு பேக் செய்து அனுப்புவதற்கான வசதி தியாகராய நகர் தலைமை தபால் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சீலிங் கருவி வாங்கப்பட்டுள்ளது. இதில் பேக் செய்யும் ஊறுகாய் பாட்டில்கள் பத்திரமாக வெளிநாடுகளுக்கு போய்ச்சேருகிறது. ஊறுகாய் பாட்டிலில் இருந்து ஒரு சொட்டு எண்ணை கூட கசியாது. சிந்தாமல், சிதறாமல் ஊறுகாய் பாட்டில் வெளிநாடுகளுக்குப் போய்ச்சேருகிறது. இந்தியாவில் தியாகராய நகர் தபால் நிலையத்தில் தான் முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ளது.

                 தியாகராயநகர் தபால் நிலையம் எல்லாவகையிலும் முன்னிலையில் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் ஏறக்குறைய 80 லட்சத்து, 35 ஆயிரத்து 462 ரூபாய்க்கு தங்க நாணயம் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. அந்நிய செலாவணி மாற்றும் சேவையில் ஏறக்குறைய 2 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் புரிந்துள்ளது. வீடுகளுக்கே தபால் சேவை சென்று சேரவேண்டும் என்ற அடிப்படையில் தபால்காரர்கள் மூலம் ஸ்டாம்பு, கவர், கார்டு விற்பனை, மணியார்டர் பெறுவது, ஸ்பீடு போஸ்ட் தபால்களை புக் செய்வது, பதிவுத்தபால்களை புக் செய்வது போன்ற நல்ல பல சேவைகளை தொடங்கியுள்ளோம். ஆனால், அவற்றுக்கு பொது மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என்று கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior