கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 24 ஆயிரத்து 334 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 78.85 ஆகும். தலா ஒரு மாணவர் மற்றும் மாணவி 493 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 30 ஆயிரத்து 862 மாணவ, மாணவிகளில் 24 ஆயிரத்து 334 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 78.85 ஆகும். இது கடந்த ஆண்டைவிட 3.70 சதவீதம் கூடுதலாகும். நெய்வேலி வட்டம் 11ல் உள்ள என்.எல்.சி., மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ரஞ்சிதா, கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் அஜய் ஆகியோர் 493 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜாய் பிரதீப், கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி நித்யா ஆகியோர் 492 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், அதே பள்ளி மாணவி வள்ளியம்மை 491 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். மெட்ரிக் பிரிவு: மாவட்டத்தில் உள்ள 88 மெட்ரிக் பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய 5,297 மாணவ, மாணவிகளில் 5,062 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.56 ஆகும்.இது கடந்த ஆண்டைவிட 3.12 சதவீதம் கூடுதலாகும். மாவட்டத்தில் 37 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி மாணவி சுபஸ்ரீ, சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவி அபிநயா ஆகியோர் 489 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர். பண்ருட்டி பாலவிகார் பள்ளி மாணவி பிரியங்கா, நியூ ஜான்டூயி மெட்ரிக் பள்ளி மாணவி லாவண்யா ஆகியோர் 487 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், கடலூர் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவி மதுபாலா, நெய்வேலி ஜவஹர் மெட்ரிக் பள்ளி மாணவர் மகேஷ் ஆகியோர் 486 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக