கடலூர்:
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி தடையின்றி வழங்கும் வகையில், நியாய விலைக் கடைகளுக்கு 100 சதவீத அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.
ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வரின் உத்தரவுப்படி 1-6-2011 முதல், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்கப்படும். இதற்காக ரேஷன் கடைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள ரேஷன் கார்டுகளுக்கு தேவையான 100 சதவீத அரிசி ஒதுக்கீடு நடப்பு மாதத்தில் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எனவே மாதம் முழுவதும் தரமான அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தகுதிக்கு ஏற்ப அளவு அரிசி இலவசமாக வழங்கப்படும். எனவே ரேஷன் கார்டுதாரர்கள் ஒரே நாளில் சென்று அரிசி வாங்க வேண்டும் என்று எண்ணாமல், வசதிப்படி தங்கள் பகுதி ரேஷன் கடைக்குச் சென்று, இலவச அரிசியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆட்சியரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக