சிதம்பரம் :
""மாநில அளவில் சாதித்து முதல்வர் கையால் பரிசு பெற வேண்டும் என்பதற்காக கவனத்துடன் படித்தேன் ஆனால் மாவட்ட அளவில்தான் சாதிக்க முடிந்தது'' என மெட்ரிக் தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் மாணவி அபிநயா தெரிவித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவி அபிநயா 489 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.
இவர் பெற்ற மதிப்பெண் விவரம்:
தமிழ் 97,
ஆங்கிலம் 94,
கணிதம் 100,
அறிவியல் 100,
சமூக அறிவியல் 98.
இதுகுறித்து அபிநயா கூறியது:
எனது தந்தை தனசேகரன் வேளாண் அதிகாரியாகவும், தாய் சுந்தரி அண்ணாமலை பல்கலை பேராசிரியராகவும் உள்ளனர். கடந்த 2002ம் ஆண்டு அறிவியல் விஞ்ஞானிக்கான விருதை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் பெற்றார். அப்போது நானும் அவருடன் சென்றிருந்ததால் தேர்வில் மாநில அளவில் சாதித்து முதல்வர் கையால் பரிசு பெற வேண்டும் என நினைத்தேன். அதற்காக கவனத்துடன் படித்தேன் ஆனால் மாவட்ட அளவில்தான் சாதிக்க முடிந்தது. பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற தற்போதிருந்தே முயற்சி எடுத்து படிப்பேன்.
நான் அதிக மதிப்பெண் பெறுவதற்காக எனது பெற்றோர், பள்ளி ஆசிரியைகள் எனக்கு ஊக்கம் அளித்தனர். "டிவி' பார்ப்பதை தவிர்த்து முழு கவனத்துடன் கூடுதல் நேரம் செலவிட்டு படித்தேன் என்றார். மாணவி அபிநயாவை தாளாளர் லட்சுமிகாந்தன், முதல்வர்கள் மீனாட்சி, சக்தி ஆகியோர் பாராட்டினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக