பண்ருட்டி:
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பண்ருட்டி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளதுடன், மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 295 மாணவர்களில் 190 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளன ர்.பள்ளியின் தேர்ச்சி வீதம் 64.4 சதவீதமாகும். இதில் டி.வாசு 483, ஜி.விக்னேஷ் 477, பி.குமரபாஸ்கரன் 473 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளனர். 8 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இதில் டி.வாசு அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளார்.
திருவதிகை பாவாடை பள்ளி:
திருவதிகை பாவாடைபிள்ளை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 104 மாணவர்கள் தேர்வு எழுதியில் 102 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி விகிதம் 98 சதவீதம். இதில் சந்தோஷ்குமார், பிரசன்னராஜாகோபால் ஆகிய இரு மாணவர்கள் 470, ஜி.சந்தியா 461, சுரேஷ்குமார் 458 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளனர். கணக்குப் பாடத்தில் திருமால் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளார். 23 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.
மருங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 97 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 95 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி வீதம் 98 சதவீதம். இதில் ஜெய்சூரியா 482, அஷ்டலட்சுமி, தனசேகர் 480, தனபாக்கியம் 478 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளனர். அஷ்டலட்சுமி, தனபாக்கியம், சுந்தர்ராஜன் ஆகியோர் கணிதப்பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
குடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 80 மாணவர்களில் 77 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி விகிதம் 96 சதவீதம். ஆர்.ராஜ்குமார், பி.பானுமதி, ஆர்.திவ்யா ஆகியோர் பள்ளி அளவில் முதல் மூன்று இடத்தைப் பெற்றனர். தமிழ், அறிவியல், சமுக அறிவியல் பாடத்தில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மெட்ரிக் பள்ளிகள் 100 வீதம் தேர்ச்சி:
பண்ருட்டியில் உள்ள ரத்தனா (செயின்ட் ஜான்ஸ்), திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. பண்ருட்டி லட்சுமிபதி நகரில் இயங்கும் ரத்தனா மெட்ரிக் பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். எஸ்.அரபத்நிஷா 449, என்.ராம்குமார் 439, ஜி.மதுமிதா 425 ஆகியோர் பள்ளி அளவில் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளனர். இம்மாணவர்களை பள்ளியின் உரிமையாளர் சி.மாயக்கிருஷ்ணன், தாளாளர் எம்.ராமக்கிருஷ்ணன், முதல்வர் எம்.ரவி ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினார்.
இதேபோல் திருவள்ளுவர் பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். ராஜலட்சுமி 456, கவிபிரியா 451, மோனிக்கா 432 ஆகியோர் பள்ளி அளவில் முதல் மூன்று இடத்தை பிடித்தனர். இதில் 6 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக