உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 28, 2011

பண்ருட்டியில் வேலைவாய்ப்பு பதிவை தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ.பி.சிவக்கொழுந்து

பண்ருட்டி:
 
            பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வேலைவாய்ப்பு பதிவை சட்டப் பேரவை உறுப்பினர் பி.சிவக்கொழுந்து, வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 2010-2011-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு மார்ச்சில் அரசு பொதுத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின் முடிவு மே 9-ம் தேதி வெளியானதை தொடர்ந்து புதன்கிழமை முதல் அந்தந்த பள்ளியில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் விநியோகிக்கப்படுகிறது.

              மேலும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வேலைவாய்ப்பு பதிவை அந்தந்த பள்ளி வளாகத்திலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் வேலை வாய்ப்பு பதிவை பண்ருட்டி சட்டப் பேரவை உறுப்பினர் பி.சிவக்கொழுந்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சுப்பிரமணியன், பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் பஞ்சவர்ணம், பெற்றோர்-ஆசிரியர் சங்க பொருளாளர் சக்திவேல், பள்ளி வளர்ச்சிக் குழு உறுப்பினர் யூசுப், உதவி தலைமையாசிரியர்கள் தீனதயாளன், பற்குணன், என்.சி.சி. அலுவலர்  ஜெ.பாலசந்தர், என்.சி.சி., அலுவலர் மோகன்குமார், தேமுதிக நகரத் தலைவர் அக்பர் அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior