உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 31, 2011

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் தொடக்கம்

கடலூர்:

           2011 மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எஸ்.எல்.சி. மெட்ரிக், மற்றும் ஆங்கிலோ இந்திய தேர்வுகள் எழுதி 3 அல்லது அதற்குக் குறைவான பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் உடனடித் தேர்வு எழுதத் தேவையான விண்ணப்பப் படிவங்கள் திங்கள்கிழமை (மே- 30) முதல் ஜூன் 3-ம் தேதி வரை விநியோகக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்து உள்ளது. 

 அரசுத் தேர்வுகள் துறை கடலூர் மண்டலத் துணை இயக்குநர் தே. ராமச்சந்திரன் இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

                பள்ளிகள் மூலமாகத் தேர்வு எழுதித் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித் தேர்வர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றில், 3-6-2011 வரை விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 

 தேர்வுக் கட்டணம்: 

எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எஸ்.எல்.சி.யில் 3 பாடங்கள் வரை ரூ. 125. 
மெட்ரிக் ஒரு பாடம் ரூ. 135. 
2 பாடங்கள் ரூ. 235. 
3 பாடங்கள் ரூ. 335. 

ஆங்கிலோ இந்தியத் தேர்வு ஒரு பாடம் ரூ. 85.
2 பாடங்கள் ரூ. 135. 
3 பாடங்கள் ரூ. 185.  

           2011 மார்ச் மாதம் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதித் தோல்வி அடைந்தவர்கள், தேர்வுக் கட்டணத்தை தாங்கள் பயின்ற பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பணமாகச் செலுத்தி, விண்ணப்பத்தை அளிக்கலாம்.

               தனித் தேர்வர்கள், அரசுக் கருவூலத்தில் கட்டணத்தைச் செலுத்தி, ரசீதினை இணைத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், மதிப்பெண் பட்டியல் நகல் ஆகியவற்றுடன் 3-6-2011க்குள் அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior