சிதம்பரம் :
ஏ.சி.டி., இண்டர்நேஷனல் மற்றும் எல்.சி.சி., இன்போடெக் நிறுவனங்களின் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
சிதம்பரத்தில் உள்ள ஏ.சி.டி., இன்டர்நேஷனல் மற்றும் எல்.சி.சி., இன்போடெக் நிறுவனங்களின் கூட்டு இலவச திட்டமாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் சிதம்பரத்தில் உள்ள ஏ.சி.டி., இன்டர்நேஷனல் தலைமை அலுவலகம் மற்றும் விருத்தாசலத்தில் உள்ள கிளை அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
முகாமில் 63 சிறுகுறு மற்றும் டைனி நிறுவனங்களும் 11 பெரிய நிறுவனங்களும் மாணவர்களை தேர்வு செய்தது. ஏ.சி.டி., இன்டர்நேஷனல் மற்றும் எல்.சி.சி., இன்போடெக் நிறுவனங்கள், தமிழகத்திலுள்ள கிளை நிறுவனங்களில் பயிற்சி முடித்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்ற 298 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாத சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு இன்டர்நேஷனல் ஐ.டி. சொசைட்டி நிர்வாக இயக்குனர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஆர்.பி., இன்போடெக் நிறுவன இன்ஜினியர் வரவேற்றார்.
ஏ.சி.டி., இண்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் தண்டபாணி முன்னிலை வகித்தார். விருத்தாசலம் கிளை நிர்வாக இயக்குனர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனிதா நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக