சிதம்பரம், நவ.24:
சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கையக்கப்படுத்தியது குறித்து பொது தீட்சிதர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை வருகிற 27-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நடராஜர் கோயிலை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து அறநிலையத்துறை கையக்கப்படுத்தியது. அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்களால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த 2 பேர் கொண்ட பெஞ்ச் கோயிலை அரசு ஏற்றது செல்லும் என்றும் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் பொதுதீட்சிதர்கள் சார்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வருகிற 27-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக