சிதம் பரம், நவ.24:
சிதம்பரத்தை அடுத்த கண்ணங்குடி ஊராட்சி, வேளப்பாடி கிராமத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறு வறண்டு போனதால் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வழங்கக்கோரியும், கண்ணங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் கே.ராஜசேகரன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெறக்கோரியும் சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பேரணி புறப்பட்டு மேலவீதி பெரியார்சிலை அருகே முடிவுற்றது. பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் பி.வாஞ்சிநாதன் முன்னிலை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், சிதம்பரம் நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் டி.குணசேகரன், பி.மாசிலாமணி உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோட்டாட்சியர் ஜி.ராமலிங்கத்திடம் வழங்கினர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக