பண்ருட்டியின் புதிய போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக ஆர்.பச்சையப்பன் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். கடலூர் ஆயுதப்படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி, தற்போது போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பதவி ஏற்றுக்கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியது: பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் 24 மணி நேரமும் போக்குவரத்து சரி செய்யப்படும்.
பஸ்கள் குறிப்பிட்ட நிறுத்தத்தில் மட்டும் தான் பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும். பஸ் நிலையத்துக்குள் பஸ்ûஸத் தவிர வேறு எந்த வாகனமும் உள்ளே செல்லக் கூடாது மீறினால் தண்டிக்கப்படுவர் என கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக