கடலூர் தாலுகாவில் பட்டா மாறுதல் மற்றும் புலம் எல்லை அளத்தல் தொடர்பாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது, விரைவாகத் தீர்வு காண சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
டிசம்பர் 28-ம் தேதி வரை இந்த முகாம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கடலூர் வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் உத்தரவின் பேரில் இந்த சிறப்பு முகாம் தொடங்கப்பட்டு இருக்கிறது. கடலூர் வட்டாட்சியர் அலுவலக நில அளவைப் பிரிவில், நிலுவையில் உள்ள பட்டா மாற்றம் மற்றும் புலம் எல்லை அளக்கக் கோரிய மனுக்களை முடிக்க இந்தச் சிறப்பு முகாம் 28-12-2009 வரை நடைபெறும். வரும் 30-11-2009 வரை ரெட்டிச்சாவடி குறுவட்டத்தில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் நில அளவர்கள் முகாமிட்டு, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளார்கள். மேற்படி தினங்களில் ரெட்டிச்சாவடி குறுவட்டத்தைச் சேர்ந்த, ஏற்கனவே மனு அளித்து உள்ளவர்கள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் தகுந்த ஆவணங்களுடன் ஆஜராகி, தங்கள் மனுக்கள் மீது நடடிக்கை எடுக்க ஒத்துழைத்துப் பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக