கடலூர்:
பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நாளான நாளை கடலூர் மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளாகும்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதியை கறுப்பு நாளாக அறிவித்து பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் போரட்டம் நடத்தி வருகின்றன. வழக்கம் போல் இந்த ஆண்டும் போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன. இந்நிலையில் நினைவு நாளை முன் னிட்டு வன்முறை சம்பங் கள் அரங்கேற்றப்படலாம் என்றும் உளவுத் துறை எச்சரித்துள்ளது. அதைத்தொடர்ந்து மாவட்டத் தில் எஸ்.பி அஷ்வின்கோட்னீஸ் தலைமையில் டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்.இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 600 போலீசார் தீவிர பாது காப்பு நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளனர். பஸ்நிலையங்கள், ரயில்நிலையங்கள், வணிக நிறுவனங்கள், மத்திய மாநில அரசு கட்டிடங்கள்,. பாலங்கள், தொலைபேசி டவர்கள், துறைமுகம், தலைவர்கள் சிலைகள், வழிபாட்டுத் தலங்கள், ரயில் பாதைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீ சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும், கல்யாண மண்டபங்களிலும் சோதனை நடத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளது. கடலோர கிராமங்களில் புதிய நபர்கள் நடமாட்டம் உள்ளதா என் றும் கியூ பிராஞ்ச் போலீ சார் கண்காணித்து வருகின்றனர். சோதனை சாவடிகளில் தீவிர வாகன தணிக்கை நடத்தப்படுகிறது. மாவட்டம் முழு வதும் 21 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைக்கும் உத்திரவிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட போலீ சார் அனைவரும் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிரடி படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலூரில் முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் தவ்ஹீத் ஜமாத் ஆகியவற்றின் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடக்க உள்ளன. இந்நிலையில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை கள் குறித்து நேற்று மாவட்ட எஸ்.பி அஷ்வின்கோட்னீஸ் தலைமையில் காவல் துறை அதிகாரிகளின் கூட்டம் நடந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக