கடலூர், :
கடலூரில் 3 நாட்கள் நடந்த தேசிய அஞ்சல் ஊழியர் சங்க தமிழ்நாடு வட்ட 23வது மாநில மாநாட்டு நிறைவு விழாவில் ஐயப்பன் எம்எல்ஏ கலந்து கொண்டார்.
கடந்த 2ம் தேதி நடந்த துவக்க விழாவில் கொடியேற்று விழா மற்றும் பேரணி நடந்தது. பொதுசெயலாளர் கிஷன்ராவ் தேசிய கொடியும், சம்மேளன பொதுசெயலாளர் தியாகராசன் சம்மேளன கொடியும் ஏற்றிவைத்தனர். நேற்று மாநாட்டின் நிறைவு நாள் விழா நடந்தது. விழாவிற்கு மாநில தலைவர் இராமசந்திரன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். மாநில செயலாளர் முத்துகிருஷ்ணன் துவக்கவுரையாற்றினர். மாநாட்டு வரவேற்புகுழு வினோலின் ஷட்ராக், ரமேஷ், மாநில சங்கம் நிர்வாகிகள் அப்துல்காதிர், விஜயகுமார் ஆகியோர் பேசினர். இதில் கடலூர் ஐயப்பன் எம்எல்ஏ பேசுகையில் , சங்கங்கள் ஒவ்வொரு ஊழியருக்கும் அவர்களது உரிமைகளையும், சலுகைகளையும் தவறாமல் பெற்று தருவதில் அயராமல் செயல்படுகின்றன. மத்திய& மாநில அரசுகள் சங்கங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது என்றார்.
அஞ்சல் துறை அதிகாரிகள் சக்கரபர்த்தி, ராஜலிங்கம், ராமானுஜம், செல்வகுமார், வெங்கடேஷ்வரலு, ஜெயசங்கர், கவிஞர் பால்கி உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விரவேற்பு குழு செயலர் இராமசாமி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக