உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 05, 2009

தொடர் விபத்து எதிரொலி பள்ளி வாகனங்கள் ஆய்வு தீவிரம் நடவடிக்கை தொடர கோரிக்கை

கடலூர்,: 

                       கடலூரில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பள்ளி வாகனங்களை திடீர் சோதனை நடத்தி விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர் .ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.  இந்த நிலையில் நடவடிக்கை தொடர வேண்டும் என சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.   புதுச்சத்திரம் அருகே பெரியப்பட்டு என்ற இடத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து ஒரு சிறுவன் பலியானான். 40 குழந்தைகள் காயம் அடைந்தனர். 

அதைத்தொடர்ந்து வட்டாரபோக்குவரத்து அலுவலர்கள் நாள் தோறும் 8 மணி முதல் 10 மணி வரை பள்ளி வாகனங்களை திடீர் தணிக்கை செய்து விதிமுறைகளை கடைபிடிக்காத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக போக்குவரத்து ஆணையர் மச்சேந்திரநாதன்  உத்தரவிட்டார்.


இதை போல் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் வருவாய்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட எஸ்.பி அஷ்வின்கோட்னீஸ் போக்குவரத்து காவல் துறைக்கும் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வட்டாரப்போக்குவரத்துதுறை, வருவாய் துறை, காவல்துறையினர் இணைந்து பள்ளி வாகனங்களை  அதிரடியாக ஆய்வு செய்தனர். இதில் விதிமுறைகள் மீறி இயங்கி சுமார் 100 வாகனங்களுக்கு  ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
எந்தவித ஆவணங்களும் இல்லாமல் இயங்கிய 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று வேதாரண்யத்தில் ஏற்பட்ட பள்ளி வேன் விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகி னர். 



இதை தொடர்ந்து கடலூர் டவுன்ஹால் அருகே அதிரடி வாகன சோதனை நடத்தப்பட் டது. வட்டாரபோக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் ஆய்வாளர்கள் சுதாகர், வேலுமணி, கோகுலகிருஷ் ணன், கடலூர் தாசில்தார் தட்சணாமூர்த்தி, போக்குவரத்து ஆய்வாளர் ராம தாஸ் ஆகியோர் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்தனர். 


இதில் எந்த வித ஆவணமும் இல்லாத ஆம்னி பள்ளி வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. விதிமுறைகளை கடைபிடிக்காத 10 வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட் டது. இந்த கூட்டு நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நடவடிக்கை தொடர வேண்டும் என்று பல்வேறு சமூக அமைப்பு கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior