உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 05, 2009

சிதம்பரம் அருகே வங்கி லாக்கரில் இருந்த ரூ.5 லட்சம் நகை மோசடி ஒருவர் கைது மேலாளருக்கு வலை


சிதம்பரம்,:
 
                 சிதம்பரம் அருகே வங்கி லாக்கரில் வைத்திருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகைகளை மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். வங்கி மேலாளர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

              சிதம்பரத்தை அடுத்த வையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மனைவி தில்லையம்மாள்(82). நேற்று முன்தினம்  இவர் சிதம்பரம் டிஎஸ்பி மூவேந்தரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், தனது மகள் ராஜலட்சுமி சிதம்பரத்தில் உள்ள வங்கி ஒன்றில் சுமார் 51 பவுன் நகையை லாக்கரில் வைத்திருந்தார். அதே ஊரை சேர்ந்த சோமு என்பவர் வங்கி மேலாளரின் உதவியுடன் நகைகளை எடுத்து மோசடி செய்து விட்டார்.  இதற்கு உடந்தையாக இந்திரா என்பவரும் இருந்ததாக தெரிவித்திருந்தார்.

               இதுகுறித்து டிஎஸ்பி மூவேந்தர், சிதம்பரம் நகர போலீசாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் சப்& இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோமு(55) என்பவரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2003ம் ஆண்டு அந்த வங்கியில் மேலாளராக பணியாற்றியவரையும், இந்திரா என்ற பெண்ணையும் போலீசார் தேடி வருகின்றனர். வங்கி லாக்கரில் நகை, பொருட்களை வைத்திருப்பதுதான் பாதுகாப்பானது என்று அனைத்து தரப்பு மக்களும் நம்பிக்கொண்டிருக்கும் வேளையில் வங்கியில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை மோசடி செய்துவிட்டதாக வரும் தகவல் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior