கடலூர்:
கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்டத்தில் 2006&07 மற்றும் 2007&08ம் ஆண்டுகளுக்குரிய அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஊராட்சிகளில், நிறுவப்பட்டுள்ள நூலகங்களில் 2009, டிசம்பர் மாதம் கடைசி இரு வாரங்களில் ஊரக நூலகப் போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டிகளில் ஊராட்சியை சேர்ந்த மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் இளையோர்கள் கலந்து கொள்ளலாம்.
போட்டிகளில் பங்கு பெறுபவர்கள் வயது மற்றும் படிக்கும் வகுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுவார்கள்.
இப்போட்டிகள் நடத்தப்படுவதன் முக்கிய குறிக்கோள் சிறார்கள் மற்றும் இளையோர்களிடையே அவர்களுக்குள்ள அறிவுத்திறனை வெளிபடுத்துவதும் மற்றும் புத்தங்களை படிக்கும் பழக்கத்தினை உருவாக்குவதற்கும் ஆகும்.
வரைப்படங்களை பார்த்து இடங்களை சுட்டிக்காட்டுதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகத்தில் உள்ள புத்தங்களின் அடிப்படையிலான நினைவாற்றல் போட்டி, பேச்சு போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.200, 2ம் பரிசு ரூ.150 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். அனைத்து போட்டியாளர்களுக்கும் பங்கு பெற்றமைக்கான சான்றிதழ் மற்றும் ரூ.10 மதிப்புள்ள பரிசு பொருள் வழங்கப்படும். மேல் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக