கடலூர், டிச. 14:
கடலூர் மாவட்டத்தில் ஊனமுற்றோர் 26 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
கடலூர் ஒயஸிஸ் ஊனமுற்றோர் பள்ளி வளாகத்தில் சர்வதேச ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியது: க டலூர் மாவட்டத்தில் ஊனமுற்றோருக்காக இரு அரசுப் பள்ளிகள் உள்பட 15 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 850 குழந்தைகள் படிக்கிறார்கள். இவர்களுக்கு ஆண்டு உதவித்தொகை 1 முதல் 5 வகுப்பு வரை ரூ.500, 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.1500, 9 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் சமூகத்தில்தான் ஊனமுற்றோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாநிலத்திலேயே ஊனமுற்றோர் எண்ணிக்கையில் கடலூர் மாவட்டம் 5-வது இடத்தில் உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 26 ஆயிரம் பேருக்கு ஊனமுற்றோர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. ஊனமுற்றோர் 2,847 பேருக்கு மத்திய அரசு உதவித் தொகை ரூ.400-ம், மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறை மூலமாக 1400 பேருக்கு ரூ.500-ம் வழங்கப்படுகிறது எனறார் ஆட்சியர். மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சீனிவாசன் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக