உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 15, 2009

உடல்​ந​லன் குறித்த தேசிய கருத்​த​ரங்கு

சிதம்ப​ரம்,​​ டிச.​ 14:​ 

                   சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக தொலை​தூ​ரக் கல்வி மைய பொறி​யி​யல் பிரிவு சார்​பில் பாது​காப்பு,​​ உடல்​ந​லன்,​​ சுற்​றுச்​சூ​ழல் மற்​றும் சக்தி சார்ந்த தலைப்​பு​க​ளில் தேசிய அள​வி​லான கலந்​தாய்வு கருத்​த​ரங்கு பல்​க​லைக்​க​ழக ஆம்​டெக் ஹாலில் சனிக்​கி​ழமை நடை​பெற்​றது.​÷க​ருத்​த​ரங்​கில் இந்​தி​யா​வின் பல்​வேறு பகு​தி​க​ளி​லு​மி​ருந்து மாண​வர்​க​ளும்,​​ ஆசி​ரி​யர்​க​ளும்,​​ தொழில்​நுட்ப வல்​லு​நர்​க​ளும் பங்​கேற்​ற​னர்.​ 83 ஆய்​வுக் கட்​டு​ரை​கள் மீது கலந்​து​ரை​யா​டல் நடை​பெற்​றது.​ து​ணை​வேந்​தர் டாக்​டர் எம்.ராம​நா​தன் குத்​து​வி​ளக்​கேற்றி கருத்​த​ரங்​கைத் தொடங்கி வைத்​துப் பேசு​கை​யில்,​​ இக்​க​ருத்​த​ரங்கு இல்​லத்​துக்கு ஏற்ற தலைப்​பில் உள்​ள​தா​க​வும்,​​ குடும்​பத்​தி​ன​ருக்கு பய​னுள்​ள​தாக விளங்​கும் என்​றும் தெரி​வித்​தார்.​மூளை பலத்​துக்கு இந்​தியா​÷தொ​லை​தூ​ரக் கல்வி மைய இயக்​கு​நர் எஸ்.பி.நாகேஸ்​வ​ர​ராவ் தலைமை வகித்​துப் பேசு​கை​யில்,​​ பண பலத்​துக்கு அமெ​ரிக்கா,​​ மனித வளத்​திற்கு சீனா,​​ உடல் பலத்​துக்கு ஆப்​பி​ரிக்கா,​​ ஆனால் மூளை பலத்​துக்கு இந்​தி​யா​தான் உள்​ளது.​ எனவே இக்​க​ருத்​த​ரங்கு உண்​மை​கள் சேர வேண்​டி​ய​வர்​க​ளுக்கு செம்​மை​யாக போய் சேர வேண்​டும் எனக்​கூ​றி​னார்.​

                   பொ​றி​யி​யல் பிரிவு தலை​வர் பி.கந்​த​பாபா வர​வேற்​றார்.​ பிர​பா​கர் அறி​முக உரை​யாற்​றி​னார்.​ பொறி​யி​யல் புல முதல்​வர் பி.பழ​னி​யப்​பன் வாழ்த்​துரை வழங்​கி​பே​சு​கை​யில்,​​ சமு​தா​யத்​தில் பெண்​கள் விழிப்​பு​ணர்வு,​​ பாது​காப்பு,​​ உடல்​ந​லன் சுற்​றுச்​சூ​ழல் மற்​றும் சக்தி சார்ந்த வளர்ச்சி ஒருங்கே இருக்க வேண்​டும் எனக்​கூ​றி​னார்.​ ப ​தி​வா​ளர் எம்.ரத்​தி​ன​ச​பா​பதி நிறைவு உரை​யாற்​று​கை​யில்,​​ பல்​வேறு ஆதா​ரங்​கள் மூலம் கிடைக்​கும் மின்​சா​ரத்​தை​யும்,​​ கோல் உற்​பத்​தி​யில் நம்​நாடு எதிர்​நோக்​கி​யுள்ள எதிர்​பார்ப்​பு​க​ளை​யும்,​​ சவால்​க​ளை​யும்,​​ இப்​புவி எதிர்​நோக்​கி​யுள்ள சுற்​றுச்​சூ​ழல் ஆபத்​து​க​ளை​யும் அறி​வி​யல் ஆர்​வ​லர்​கள் செய்ய வேண்​டி​ய​வற்​றை​யும் புள்ளி விவ​ரங்​க​ளு​டன் விளக்​கி​னார்.​÷அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக முன்​னாள் துணை​வேந்​தர் பி.வி.வைத்​தி​ய​நா​தன் சிறப்​பு​ரை​யாற்​றி​னார்.​ கே.சீனி​வா​சன் நன்றி கூறி​னார்.​ விழா​வில் பிஜி​ஆர் எனர்ஜி சிஸ்​டம்ஸ் லிமி​டெட் தலை​வர் முரளி,​​ ஆசி​யன் பெயிண்ட்ஸ் தொழிற்​சாலை மேலா​ளர் ராஜ​சே​கர்,​​ செல்​வக்​கு​மார் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior