உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 15, 2009

விக்கிரவாண்டி & தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில்மண் பரிசோதனை

பண்ருட்டி: 

                 சாலைகளில் ஏற்படும்  விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான சாலை களில் விபத்துகள் குறைந்துள்ளது. விக்கிரவாண்டியிலிருந்து  தஞ்சாவூர்  வரை செல்லும் சாலை தற்போது குறுகிய அளவில் உள்ளது.

                  இவற்றின் மொத்த நீளம் 165 கி. மீட்டர் ஆகும். 7 மீட்டர் அகலம் உள்ள சாலையை 10 மீட்ட ராக அகலப்படுத்துவதற்கு அரசு முடிவு செய்தது. இதன்படி சாலையை ஆய்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. சாலையை அகலப்படுத்தவும், பாலங்களை புதுப்பிக்கவும் மத்திய அரசு  ரூ. 230 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததுள்ளது. இது குறித்து தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் அதிபதி கூறியதாவது: விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை உள்ள சாலையில் பெரிய பாலங் கள் 54, சிறிய பாலங்கள் 300 உள்ளது. தற்போது  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியின் மூலம் இப்பணிகள் துவங்க விக்கிரவாண்டியிலிருந்து மண் பரிசோதனை  செய்யப்பட்டு வருகிறது. தற் போது பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை பெண்ணை ஆற்றில் மண் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.  இந்த பணிகள் வரும் ஏப்ரல் வரை நடை பெறும். ஆய்வுக்கு பின் முறையாக டெண்டர் விடப்பட்டு சாலைகள் அகலப்படுத்தும்  பணிகள் துவங்கும். சாலைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்படும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior