சிதம்பரம், டிச. 14:
2008-09 ஆம் ஆண்டு வெள்ள நிவாரண திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் செலவில் நகராட்சியால் புதுப்பிக்கப்பட்ட சிதம்பரம் பஸ் நிலையம் திறக்கப்பட்டது. கடலூர், சென்னை பஸ்கள் நிற்கும் பகுதி முழுவதிலும் சிமெண்ட் சாலை, பஸ் நிற்கும் தடுப்புக் கட்டைகள், நடைபாதை ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டன. இ தன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நகரமன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் தலைமை வகித்தார். ஆணையாளர் பி.ஜான்சன் முன்னிலை வகித்தார். பொறியாளர் மாரியப்பன் வரவேற்றார். பஸ் நிலையத்தில் கீரப்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவரும், திமுக நகரச் செயலாளருமான கே.ஆர்.செந்தில்குமார் திறந்து வைத்தார். இந் நிகழ்ச்சியில் திமுக அவைத் தலைவர் தென்னவன் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் ராமச்சந்திரன், நகரமன்ற உறுப்பினர்கள் த.ஜேம்ஸ்விஜயராகவன், அப்புசந்திரசேகரன், இரா.வெங்கடேசன், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக