கடலூர்:
வங்ககடலில் உருவாகியுள்ள வார்ட் புயல் காரணமாக கடந்த 4 நாட்களாக மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர்.
இந்நிலையில் கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பிவிசி தொழிற்சாலைகளுக்கு ஜப்பானில் இருந்து விசிஎம் (வினையல் குளோரைடு மோனமார்) என்ற ரசாயனத்துடன் வந்துள்ள 2 கப்பல்கள் அலையின் சீற்றத்தால் சித்திரைப் பேட்டையில் உள்ள துறைமுகத்திற்கு வரமுடியாமல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு கப்பலில் 7 ஆயிரம் டன் ரசாயனமும், மற் றொரு கப்பலில் 3 ஆயிரம் டன் ரசாயனமும் இருக்கிறது. இது குறித்து கடலூர் துறைமுக அதிகாரியிடம் கேட்டபோது “இரண்டு கப்பல்களும் புயல் காரணமாக துறைமுகத்திற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கப்பல்களில் உள்ள ரசாயனம் போதிய பாதுகாப்புடன் உள்ளது. புயல் தாக்கத்தால் பாதிப்புகள் வராது. எனினும் கடலில் அலையின் சீற்றம் குறைந்த பிறகே கப்பல்கள் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படும். அது வரையில் நடுக்கடலிலேயே நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக நடுகடலில் 10 ஆயிரம் டன் ரசாயனத்துடன் கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் கடலூர் கடற்கரை கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக