பண்ருட்டி, டிச. 2:
கொள்ளுக்காரன்குட்டையில் அனல்மின் நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், தலைமையேற்று ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என ஒன்றியக் குழுக் கூட்டத்தில் குழு தலைவர் எழிலரசி ரவிச்சந்திரன் கூறினார்.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் எழிலரசிரவிச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.÷கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:எழி லரசன்: மாளிகம்பட்டு உள்ளிட்ட கிராமப் பகுதியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மிக மோசமான நிலையில் மழைக் காலத்தில் ஒழுகி மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத நிலையில் உள்ளன. இப்பள்ளிகளுக்கு இருக்கைகள் செய்து கொடுத்து மாணவர்கள் படிக்க வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்.÷அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மாளிகம்பட்டில் ரூ.4.60 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடம் 5 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எழிலரசி ரவிச்சந்திரன்: விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.÷பூரா மூர்த்தி: இதுநாள் வரை சின்னபுறங்கனி கிராமத்துக்கு ஒரு சிமென்ட் சாலை வசதி கூடி செய்து தரவில்லை. ஏன் என்று தெரியவில்லை.
எழிலரசி ரவிச்சந்திரன்: விரைவில் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாலா: எல்.என்.புரத்தில் கட்டப்பட்ட கரும காரிய கொட்டகைக்கு ஆன கூடுதல் தொகை ரூ.2 லட்சம், 9 மாதங்கள் ஆகியும் தரவில்லை.÷எழிலரசி ரவிச்சந்திரன்: உரிய அதிகாரிகளை ஆலோசனை செய்து பணம் அளிக்க நடவடிக்கை எடுக்கின்றேன்.
கம்சலிங்கம்: ஒன்றியக் கூட்டத்தில் கடவுள் வாழ்த்து, தேசிய கீதம் பாடுவதில்லை, வரும் கூட்டம் முதல் பாட நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மை அலுவலகத்தில் இருந்து விவசாயிகளுக்கு மானியம் கிடைப்பதில்லை. விதை, உரம் எதுவும் குறித்த காலத்தில் அளிப்பதில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
கொள்ளுக்காரன்குட்டையில் அமையவுள்ள டேனக்ஸ் அனல்மின் நிலையத்தால் விவசாயம் பாதிக்கப்படும். முன்னரே நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தாலும், புதிய வீராணம் திட்டத்தாலும் தண்ணீர் உருஞ்சப்பட்டு நிலத்தடி நீர் அதலபாதாலத்துக்கு சென்றுவிட்ட நிலையில், அனல் மின் நிலையம் அமைப்பதை எதிர்க்கின்றேன்.
எழில ரசி ரவிச்சந்திரன்: கிராம மக்கள் பாதிப்பு என்று கருதினால் நானே முன்னின்று ஆர்ப்பாட்டம் செய்திறேன் என கூறினார்.
கூட்டத் தில் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.கல்யாண்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.இந்திராதேவி, பொறியாளர் பி.ஆனந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக