உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 22, 2009

நூறாண்டை கடந்த அரசு பள்ளி இடிந்து விழும் அபாயம்! : விபரீதம் நடக்கும் முன் நடவடிக்கை தேவை

ஸ்ரீமுஷ்ணம்:

                                 இப்ப விழுமோ, எப்ப விழுமோ என மாணவர்களையும், ஆசிரியர்களையும் அச்சுறுத்தி வரும் தனியார் கட்டடத் தில் இயங்கி வரும் நூற்றாண்டை கடந்த ஸ்ரீமுஷ்ணம் அரசு நடுநிலைப் பள்ளியை சீரமைக்க  மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                       ஸ்ரீமுஷ்ணத்தில் கடந்த 1892ம் ஆண்டு  ஆரம்ப பள்ளியாக துவங் கப்பட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி தற்போது நடுநிலைப்பள்ளியாக இயங்கி வருகிறது. தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் இப்பள்ளியில் சேத்தியாத்தோப்பு, கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற் பட்ட கிராம மக்கள் படித்தனர். நாளடைவில் சுற்றுப்புற பகுதிகளில் பள்ளிகள் துவங்கியதால் தற்போது ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் மட்டும் படித்து வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் தாலுகாவிலேயே அதிக மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளி என்ற பெருமை பெற்ற இப்பள்ளியில் தற்போது 480 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
சுமார் 65 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் இப்பள்ளியின் பிரதான கட்டடத்தில் 6, 7, 8 வகுப்புகள் நடந்து வருகிறது. கட்டடத்தின் மேற்கூரை கம்பிகள் அனைத்தும் துருப்பிடித்து ஸ்திரத்தன்மை இழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேல் தளத்தை தாங்கி நிற்கும் பக்கவாட்டு சுவர்களும் நீர் கசிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் பக்கவாட்டு சுவர்களில் இருந்து நீர் கசிந்து வகுப்பறையில் ஓடியது. இதனால் வகுப்புகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனமழை பெய் தால் அனைத்து மாணவர்களையும் பள்ளியின் பின்புறம் கட்டியுள்ள புதிய கட்டடத்தில் அமர செய்வதால் வகுப்புகள் நடத்த முடிவதில்லை. கடந்த ஏழாண்டாக கட்டடத் தின் உரிமையாளருக்கு வாடகை ஏதும் தராத காரணத்தால்  தனியார் நபரும் பள்ளியை சீரமைக்காமல் உள்ளார். இதனால் எப்போது வேண்டுமானாலும் கட்டடம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதுபற்றிய செய்திகள் நாளிதழ்களில் வரும்போது பள்ளியில் பணி செய்யும் ஆசிரியர்களிடம் கட்டடத்தின் நிலை குறித்து அறிக்கை பெறுவதாடு சரி. பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவது குறித்தோ, வேறு இடத்திற்கு பள்ளியை மாற்றுவது குறித்தோ எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

                         இதனால் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி ஸ்ரீமுஷ்ணத்திற்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் இப்பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த மனுவும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை அனுப்பிய மனுக்களும் பயனற்று போனது. நாளுக்கு நாள் கட்டடம் சேதமடைந்து வருவதால் பள்ளியில் ஆசிரியர்கள் மரண பயத்துடன் பாடம் நடத்தி வருகின்றனர். கும்பகோணம் தீ விபத்தில் பல மாணவர்கள் இறப்பிற்கு பிறகு கண் விழித்த அரசு அதன் பின்னர் கூரை கொட்டகையில் வகுப்புகளை நடத்த தடை விதித்தது. ஒரு பள்ளி வேன் விபத்தில் சிக்கி மாணவரின் உயிர் இழப்பிற்கு பின்னர் அனைத்து பள்ளிகளின் வாகனங்களையும் ஆய்வு செய்து வருகிறது.

                      ஒரு பள்ளியில் விபத்து ஏற்பட்டால் உடனே அனைத்து பள்ளிகளுக்கும் நெருக்கடி கொடுக்கும் அரசு நிர்வாகம், பாதுகாப்பற்ற நிலையில் இயங்கி வரும் அரசுப் பள்ளி கட்டடம் குறித்து தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவது வேதனையளிக்கிறது. இந்த பள்ளியில் அதுபோன்று விபரீதம் ஏற்படுவதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் விழித்துக் கொண்டு இடிந்து விழும் நிலையில், தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் பள்ளியை சீரமைக்கவோ அல்லது பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் கல்வியாண்டில் இப்பகுதி மக்கள் அரசு பள்ளிகளை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior