உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 22, 2009

சுனாமியால் பாதிக்கப்பட்டோர் ஆட்சியரிடம் மனு

கடலூர், டிச. 21: 
 
                  கடலூர் அருகே சுனாமியால் பாதிக்கப்பட்ட சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண்கள் 50 பேர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.  
 
             கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன் தலைமையில் சென்ற அப்பெண்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:  
 
 
                    சிங்காரத்தோப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் இ.சி.ஐ. நிறுவனம், அம்பேத்கர் நூற்றாண்டு நிறுவனம் மற்றும் வேல்டு விஷன் நிறுவனம் ஆகியவை கட்டிக் கொடுத்த தாற்காலிக வீடுகளில் வசிக்கிறோம். இயற்கை சீற்றம் காரணமாக இந்த வீடுகள் பழுதடைந்து மோசமாகி விட்டன. மழைநீர் கசிந்து கொண்டு இருக்கிறது. வீட்டின் மேல்தளத்தில் ஓடு போடாததால் கட்டடம் மோசமாகி விட்டது. வெயில் காலத்திலும் வசிக்க முடியாத நிலை இருக்கிறது. வீடுகளில் சமைக்கவும் முடியவில்லை.  
 
             சம்பந்தப்பட்ட நிறுவனங்களைக் கேட்டால் வீடுகட்டிக் கொடுக்கும் தங்களது திட்டம் முடிந்து விட்டதாகவும் கட்டிய வீடுகள் அனைத்தும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கிறார்கள். 
 
                       எனவே சிங்காரத் தோப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பான நிரந்தர வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளனர்.
 
                    மாவட்ட ஆட்சியரிடம் தாமரைச் செல்வன் அளித்த மற்றொரு கோரிக்கை மனுவில், குழந்தைக் காலனியில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி வடியாமல் பாதிப்பு ஏற்படுகிறது.  இப்பகுதியில் உள்ள சின்ன வாய்க்காலை, ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து அகற்றி, தூர்வாரி மழைநீர் வழிந்தோட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior