உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 22, 2009

என்.எல்.சி. நிர்வாகத்துடன் பேச்சு நடத்த தடையில்லை

நெய்வேலி, டிச.21: 

                       தொழிலாளர்கள் கோரிக்கைத் தொடர்பாக என்எல்சி நிர்வாகத்துடன் பேச்சு நடத்த எவ்வித தடையுமில்லை. எனவே வீண் வதந்திகளால் தொழிலாளர்கள் குழப்பமடைய வேண்டாம் என தொமுச செயலர் ஆர்.கோபாலன்  தெரிவித்தார்.  என்எல்சி தொழிலாளர்களின் போனஸ் மற்றும் இன்சென்டிவ் தொடர்பாக நிர்வாகத்துக்கும், நிர்வாகத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கும் இடையே 2 மாதத்துக்கு முன் ஒப்பந்தம் ஏற்பட்டது.  இதை மாற்று தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்து போராட்ட நடவடிக்கையில் இறங்கியதோடு நிர்வாகத்துக்கு ஸ்டிரைக் நோட்டீஸþம் அளித்ததோடு, சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருந்தன. வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் தொழிற்சங்கங்கள் சில துண்டு பிரசுரங்களை வெளியிட்டு தொழிலாளர்களை குழப்பி வருவதாகவும், இதனால் தொழிலாளர்கள் யாரும் குழப்பமடைய வேண்டாம் என தொமுச செயலர் ஆர்.கோபாலன் கேட்டுகொண்டுள்ளார்.  

இதுகுறித்து மேலும் அவர் கூறியது:  

                             தொழிலாளர்கள் கோரிக்கைத் தொடர்பாக நிர்வாகத்துடன் பேச எவ்வித தடையும் ஏற்படவில்லை. அதேபோன்று மாற்றுத் தொழிற்சங்கங்களைக் கேட்டுக்கொண்ட பிறகுதான் நிர்வாகத்துடன் பேச்சு நடத்தவேண்டும் என்று உயர் நீதிமன்றமோ அல்லது மத்திய தொழிலாளர் நல ஆணையரோ எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை.  வழக்கம்போல் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்.  ஊதிய மாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளோம். மற்ற பொதுத்துறை நிறுவனங்களில் ஊதியமாற்று ஒப்பந்தம் இன்னும் ஏற்படவில்லை. 

                          இருப்பினும் என்எல்சியில் ஊதிய மாற்று ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்துவோம். நிர்வாகம் அலுவலக ஊழியர்களுக்கு வருகைக்கான அலவன்ஸ கிடையாது என்று அறிவித்த போதிலும், தாமதிக்காமல் உடனடியாக நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி, அவர்களுக்கும் வருகைக்கான அலவன்ûஸப் பெற்று தந்துள்ளோம்.  எனவே தொழிலாளர்கள் தேவையற்ற வதந்திகளுக்கு இடம் கொடுக்காமல், தொழிற்சங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு வழக்கம் போல் ஆதரவு அளிக்கவேண்டும் என்று கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior