உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 22, 2009

தொற்று நோய் அபாயத்தில் மாணவர்கள் : வார்டு புயலால் கடலூரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறுத்தம்

கடலூர்:

                            வார்டு புயல் காரணமாக கடலூரில் நடைபெற்று வந்த பாதாள சாக்கடைத்திட்டப்பணிகள்  நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடலூரில் நகரில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள்  காலக் கெடு முடிந்து ஓராண்டாகியும் இதுவரை முடிக்கவில்லை. இதனால் கடலூரில் சின்னபின்னமான சாலைகள் மழையில் சகதிகளாகிவிட் டன. பல்வேறு நலச்சங்கங்கள் அரசியல் கட்சிகள் போராடியும் விடிவு காலம் பிறக்கவில்லை. கலெக் டர் சீத்தாராமன் இந்த பிரச்னையை கையில் எடுத்து அன்றாடம் நடந்து வரும் பணிகள்  குறித்து அவ்வப் போது தகவல் கூறுமாறு பணித்தார். ஆனால் ஒரு சில நாட்களே அவற்றை அதிகாரிகள் கடைபிடித்தனர். மேலும் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் வாகனம் ஓட்டுவதற்கு குண்டும் குழியுமான சாலைகளை அவ்வப் போது சமன் செய்து கொடுத்து வந்தனர். இந்நிலையில் வார்டு புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக கடலூரில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.

                      இதையே ஒரு சாக்காக வைத்து பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது. பொது மக்கள் வாகனங்கள் ஓட்டி செல்வதற்காக சாலை சமன் செய்யும் பணி கூட நடைபெறவில்லை. இதனால் அப்துல்காதர் தெரு, சப் ஜெயில் ரோடு, கவரத்தெரு, பாஷியம் ரெட்டித்தெரு, திருப்பாதிரிப்புலியூர் மாரியம்மன் கோவில் தெரு,  நெல்லிக் குப்பம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையே தெரியாத அளவுக்கு குண் டும் குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே மீண்டும் கலெக்டர் தொடர் நடவடிக்கை மேற்கொண்டால் தான் பாதாள சாக்கடைத் திட்டம் விரைவில் முடிவடையும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior