நெல்லிக்குப்பம்:
சோழவல்லி சுடுகாட்டில் போடப்பட்ட ஆழ்துளை கிணறு பயன்படுத்தாமலே பாழானது. நெல்லிக்குப்பம் நகராட்சி வான்பாக்கம் சாலையில் சோழவல்லி சுடுகாடு உள்ளது. நகராட்சியின் பெரும் பான் மையான மக்கள் இந்த சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு தண் ணீர் வசதி இல்லாததால் இறுதி சடங்கு செய்ய வருபவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மக்கள் வசதிக்காக அங்கு பல லட்சம் மதிப்பில் குளியலறை, தண்ணீருக்காக ஆழ்துளை கிணறும் அமைத்தனர். ஆனால் மின்மோட்டார் வேலை செய்யவில்லை. ஓராண்டுக்கு மேலாகியும் மின்மோட்டார் பொருத் தாமல் பயனற்று இருந்தது. தற்போது ஆழ்துளை குழாயின் பைப்புகளை உடைத்து குழாய் முழுவதும் மண், கற்களை போட்டனர். இதனால் ஆழ்துளை கிணறு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குளியலறை பகுதியும் பாழடைந்து வருகிறது. பணி முடிந்தால் ஒப் பந்ததாரருக்கு காசோலை வழங்கிவிட்டால் தங்கள் வேலை முடிந்துவிட்டதாக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். செய்து முடிக்கப்பட்ட பணி முறையாக உள்ளதா பயன்படுகிறதா என அதிகாரிகள் கண்காணித்தால் மக்கள் வரிப்பணம் பாழாவதை தடுக்க முடியும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக