உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 22, 2009

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மறியல்

 கடலூர், டிச. 21: 
 
                   மறியலில் ஈடுபட முயன்ற தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஆசிரியர்கள் 24 பேர், கடலூரில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.  
 
                      தொடக்கப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும்.  மாணவர் ஆசிரியர் விகிதத்தை 30:1 என்று மாற்ற வேண்டும். மாணவர்கள் பள்ளி வாகன விபத்துக்களில் இறப்பதைத் தவிர்க்க, மத்திய அரசு அறிவித்து இருக்கும் அண்மைப் பள்ளி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 6-வது ஊதியக்குழு பரிந்துரையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறைக்கப்பட்டு உள்ள ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்.  ஒன்றுமுதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும்.  
 
                       அனைத்து நிர்வாகத்திலும் உள்ள பள்ளிகளில் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும்.  சமச்சீர் கல்வித் திட்டத்தில் தாய்மொழியே பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும். தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக இந்த ஊர்வலம் மற்றும் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.  
 
                 தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் மஜீது தலைமையில், சங்க அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அங்கு மறியலில் ஈடுபட முயன்றவர்களைப் போலீஸôர் கைது  செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior