சிதம்பரம், டிச. 21:
கடலூர் மாவட்ட பிஎஸ்என்எல் ஊழியர் சங்க 5-வது மாநாடு சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. பி.எஸ்.என்.எல். சிதம்பரம் கோட்டத் தலைவர் ஜி.பழனி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வி.சிதம்பரநாதன் வரவேற்றார். மாநில உதவிச் செயலர் எஸ்.முத்துக்குமாரசாமி தொடக்கவுரையாற்றினார்.
பிஎஸ்என்எல் இன்றைய நிலையும், நமது கடமையும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மாநிலச் செயலர் எஸ்.செல்லப்பா, பொதுச் செயலாளர் டி.ராஜேந்திரன், மாவட்டச் செயலர் கே.டி.சம்பந்தம் ஆகியோர் கருத்துரையாற்றினர். பின்னர் நடைபெற்ற பொருளாய்வுக்குழுவில் அகில இந்திய துணைப் பொதுச்செயலர் பி.அபிமன்யு சிறப்புரையாற்றினர். அவர் பேசுகையில், பிஎஸ்என்எல் நிறுவன பங்கு விற்பனையைத் தடுக்கவும், சேவையை மேம்படுத்தவும் ஊழியர்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மாவட்ட பொருளாளர் வி.குமார் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக