விருத்தாசலம்:
: விருத்தாசலத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
விருத்தாசலம் நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.÷கூட்டம் தொடங்கியவுடன் பஸ் நிலையக் கடைகள், மாட்டுச்சந்தை மற்றும் எடை பார்க்கும் கருவி ஆகியவைகளுக்கான ஏலநாள் முன்னறிவிப்பு இன்றி ஒத்திவைக்கப்பட்டதன் காரணம் என்னவென்று, அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் காமராஜ், அருளழகன், சந்திரகுமார் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு நிர்வாக காரணங்களால் ஏலத் தேதி ஒத்தி வைக்கப்பட்டது என நகராட்சி ஆணையர் தெரிவித்தார். இதில் திருப்தி அடையாத அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அதன் காரணத்தை நகர்மன்ற தலைவரிடத்தில் கேட்டனர்.÷அப்போது குறுக்கிட்டு பதிலளித்த தி.மு.க நகர்மன்ற உறுப்பினர் ராமு, மன்றத்திற்கு உட்படாத கேள்விகளைக் கேட்டு நேரத்தை வீணாக்க வேண்டாமென கூறினார். தொடர்ந்து ஏலம்தள்ளி போனதற்கான காரணங்களை கேட்டுக்கொண்டிருந்த அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற தலைவரிடம் ஆவேசமாக பேசிவிட்டு மேசையில் இருந்த ஒலிவாங்கியை தள்ளிவிட்டு கூட்டத்தினை புறக்கணிப்பதாகக் கூறி வெளிநடப்பு செய்தனர். பின்னர் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் செயல்படாமல் உள்ளதே என தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியதற்கு, அது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேர்மன் கூறினார்.
பின்னர் விருத்தாசலம் சாவடிக்குப்பம் பகுதியில் 50-லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு புதிய ஒப்பந்தப் புள்ளி கோருவது உள்ளிட்ட 54- தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மைக்கை தள்ளி மன்ற சொத்தை சேதப்படுத்தியதாகக் கூறி அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்கள் காமராஜ், அருளழகன், சந்திரகுமார் ஆகிய மூன்று பேருக்கும் அடுத்து வரும் ஒரு கூட்டத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படும் என்று நகர்மன்ற தலைவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக