உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 12, 2010

காராமணிக்குப்பம் வாரச்சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது

நெல்லிக்குப்பம் :

                        பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காராமணிக்குப்பம் வாரச் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வார சந்தை நடக்கும். இங்கு காய்கறிகள், கருவாடு, ஆடு, மாடுகள் என விற்பனைக்கு வரும். சில ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு வாரமும் 500 மாடுகளுக்கு மேல் விற்பனைக்கு வரும். நாளடைவில் மாடுகள் வரத்து குறைந்ததால் மாட்டு வியாபாரிகள் வருகையும் குறைந்தது. தற்போது சந்தைக்கு 50 மாடுகளுக்கு குறைவாகவே வருகிறது. சந்தையில் வழக்கமாக 200 காய்கறி கடைகள் இருக்கும். 5 ஆயிரம் மக்கள் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள்.பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் போகி பண்டிகைக்கு முதல் நாள் போகி சந்தை கூடும்.

                            இந்த ஆண்டு வரும் புதன்கிழமை போகி பண்டிகை வருகிறது. ஆனால் நேற்று வழக்கமான சந்தை கூடியதால் இந்த ஆண்டு போகி சந்தை தனியாக நடக்காது என அறிவித்தனர். இதனால் நேற்று நடந்த வார சந்தையில் 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி கடை வைத்திருந்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடி காய்கறிகளை போட்டி போட்டு வாங்கினர்.பொங்கல் பானை மற்றும் மாட்டு பொங்கலுக்கு மாடுகளுக்கு தேவையான கயிறு, மணி போன்றவை விற்பனையும் அமோகமாக இருந்தது. சந்தை முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior