உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 12, 2010

அ.தி.மு.க., உட்கட்சி தேர்தல் குழப்பத்தில் தொண்டர்கள்

நெல்லிக்குப்பம் :

                அ.தி.மு.க., உட்கட்சி தேர்தலில் "மெகா குழப் பம்' நிலவுவதாக தொண்டர்கள் புலம்புகின்றனர்.

                     தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., உட்கட்சி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் அக்கட்சிக்காரர் ஒருவர் கொலை செய்யப்பட்டதால், பேச்சுவார்த்தை மூலம் நிர்வாகிகளை தேர்வு செய்ய ஜெ., உத்தரவிட்டார்.

                          கடலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக கிளைக் கழக நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. பேச்சுவார்த்தை மூலம் நிர்வாகிகள் தேர்வு செய்ததாக கூறினர். இவர்கள் தேர்வு செய்ததற்கான அதிகாரபூர்வ சான்று கிடைக்கவில்லை. இவர்கள் ஓட்டு போட்டு தான் நகர, ஒன்றிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். கிளை நிர்வாகிகளுக்கு சான்றிதழ் கிடைக்காத நிலையில் நகர, ஒன்றிய நிர்வாகிகளுக்கு போட்டியிடுபவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுவரை நகர, ஒன்றிய நிர்வாகிகள் பட்டியலும் வெளியிடவில்லை. சான்றிதழும் வழங்காத நிலையில், இவர்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டிய மாவட்ட நிர்வாகிகள் தேர்தலுக்கு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பேச்சுவார்த்தை மூலம் நடந்தால் கூட நகர, ஒன்றிய நிர்வாகிகள் யாரை ஆதரிக்கின்றனர் என்று கேட்கமுடியாது. கிளை, நகர, ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல் முடிவுகள் அறிவித்த பிறகே மாவட்ட தேர்தல் நடப்பது முறையாக இருக்கும்.

        இந்நிலையில் வரும் 17ம் தேதி முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை முன்னிட்டு நகர ஒன்றியங்களில் பொதுக்கூட்டங்களை யார் நடத்துவது எனப் புரியாமல் கட்சியினர் குழப்பத் தில் உள்ளனர். ஒவ்வொரு கட்ட தேர்தல் முடிவுகள் அறிவித்த பிறகு அடுத்த கட்ட தேர்தலை நடத்துவதே ஜனநாயகமாக இருக்கும் என அக்கட்சியினர் கூறுகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior