ராமநத்தம் :
விபத்துகள் அதிகம் நடக்கும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமநத்தத்தை மையமாக கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் சாலையோரத்தில் உள்ள கிராம மக்கள் சாலையை கடக்க முயலும் போது விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. இவைத்தவிர அதிவேகமாக செல்லும் வாகனங்களாலும் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு ராமத்தம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துகளில் சிக்குபவர்களை அவசர சிகிச்சைக்காக வேப்பூர் அல்லது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் மூலமே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டியுள்ளது. வெகு தொலைவில் இருந்து ஆம்புலன்ஸ் வருவதற்குள் விபத்தில் சிக்கியவர்களுக்கு ரத்த போக்கு அதிகரித்து உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனை தவிர்த் திட விபத்துகள் அதிகம் நடைபெறும் ராமநத்தம் பகுதியை மையமாக கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை துவங்கினால், விபத்தில் சிக்குபவர்களை உடனடியாக காப்பாற்ற முடியும். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக