உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 27, 2010

பண்ருட்டி சேர்மன் கடை முன் ஆக்கிரமிப்பு: நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக அகற்றம்

பண்ருட்டி : 

             பண்ருட்டியில் நேற்று இரண்டாம் நாளாக நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், நகராட்சி சேர்மன் கடை முன் இருந்த ஆக்கிரமிப்பும் அதிரடியாக அகற்றப்பட்டது. பண்ருட்டி நகரின் பிரதான சாலைகளில் பெருகிய ஆக்கிரமிப்பினால் போக்குவரத்து பாதித்து. அதனையொட்டி நேற்று முன்தினம் நகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கமிஷனர் உமாமகேஸ்வரி எவ்வித பாகுபாடு இன்றி ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற உத்தரவிட்டார். இரண்டாம் நாளாக நேற்று இந்திரா காந்தி சாலை, கடலூர் ரோடு மற்றும் கும்பகோணம் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

                  அப்போது பலர் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொண்டனர். ஆனால் கடலூர் சாலையில், நகராட்சி சேர்மன் பச்சையப்பனுக்கு சொந்தமான மளிகை கடையில் நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்பை கடை ஊழியர்கள் அகற்றவில்லை. அதனை நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் மூலம் அகற்றினர். நகரமைப்பு சர்வேயர் அழகேசன், சுகாதார அலுவலர் ராஜேந்திரன், ஆய்வாளர்கள் சுதாகரன், ஆல் பர்ட்ஞானதீபம் உடனிருந்தனர். நெய்வேலி டி.எஸ்.பி., மணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior