நெல்லிக்குப்பம் :
நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தின் உள்ளே செல்லாத பஸ் டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டுமென செயலாக்க குழு கோரியுள்ளது. நெல்லிக்குப்பம் நகராட்சி பஸ் நிலைய செயலாக்க குழு கூட்டம் சேர்மன் கெய்க்வாட்பாபு தலைமையில் நடந்தது. கமிஷனர் உமாமகேஸ்வரி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் பாண்டியன், தி.மு.க., அங்கமுத்து, கவுன்சிலர் தமிழ் மாறன், பர்த்தசாரதி, தனசேகரன், அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேகத்தடை மீது வெள்ளை பெயின்ட் அடித்தல், பஸ் நிலைய முன்புறம் ஹைமாஸ் லைட், போலீஸ் நிழற்குடை, போக்குவரத்து சிக்னல், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். டவுன் பஸ்கள் குடிதாங்கி சாவடி வரை சென்று வர வேண்டும். பஸ் நிலையத்தின் உள்ளே செல்லாத பஸ் டிரைவர்கள் லைசென்சை ரத்து செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினர். நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் விபத்துக்கள் தவிர்க்கப்படுமென கவுன் சிலர்கள் கூறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக