உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 27, 2010

மாசி மகத்தன்று கடலில் குளிக்க தடை: போலீஸ் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

கடலூர் : 

                            கடலூர் தேவனாம்பட்டினத்தில் நாளை நடைபெறவுள்ள மாசி மக திருவிழாவிற்கு 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மாசி மக திருவிழா நாளை (28ம் தேதி) நடக்கிறது. அதனை முன்னிட்டு போலீசார் மற்றும் தேவனாம்பட்டினம், ரெட்டிச்சாவடி, முதுநகர் பொதுமக்கள் பங்கேற்ற மாசி மகம் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் கடலூர் டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் நடந்தது. டி.எஸ்.பி., ஸ்டாலின் தலைமை தாங்கினார். சேர்மன் தங்கராசு முன் னிலை வகித்தார். இன்ஸ் பெக்டர்கள் புதுநகர் ஆரோக்கியராஜ், முதுநகர் கண்ணன், ரெட்டிச்சாவடி ஏழுமலை, சப் இன்ஸ் பெக்டர்கள் ஆனந்தபாபு, பொன்ராஜ், கவிதா, பிரியா மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

                கூட்டத்தில், மாசி மக திருவிழாவிற்கு வருபவர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களை விசை படகுகளில் கடலில் ஏற்றிச் செல்லக் கூடாது என கடலோர கிராம மக்களிடம் அறிவுறுத்தப்பட்டது. மேலும், மீட்பு பணிக்காக ஒவ்வொரு கிராமத்திலும் 10 பேர் போலீசாருக்கு உதவிட குழு அமைக்கப்பட்டுள் ளது. மாசிமக திருவிழா பாதுகாப்பு பணியில் டி.எஸ்.பி., தலைமையில், இரண்டு இன்ஸ்பெக்டர்கள், எட்டு சப் இன்ஸ்பெக்டர்கள் உட் பட 200 போலீசார் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior