கடலூர் :
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் தமிழ் வரைகலை போட்டி கடலூர் ஜெயராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நேற்று நடந்தது. கோவை செம்மொழி மாநாட்டில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் தமிழ் வரைகலைப் போட்டியில் கலந்து கொள்வதற்கான தேர்வுப் போட்டி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் நேற்று நடந்தது. இப்போட்டியில் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியாக தமிழில் வெவ் வேறு தலைப்புகள் வழங்கப்பட்டது. கடலூர் ஜெயராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த போட்டித் தேர்வுக்கு மாவட்டம் முழுவதுமிருந்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 205 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை சி.இ.ஓ., அமுதவள்ளி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லூரி நிறுவனர் சேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார். எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., கதிர்வேல், டி. இ.ஓ., விஜயா, ராஜேந்திரன், எல்காட் நிறுவன மேலாளர் காமேஸ்வரன் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக